சித்த வேதம்
(ஜீவனுடைய சரித்திரம்) மோட்ச சூத்திரம்
**************************************************************
உபதேசித்தவர் சித்த சமாஜ நிறுவ்கர்
சுவாமி சிவானந்த் பரமஹம்சர்
**************************************************************
ஜீவ சரித்திரங்கள் பல உள அவையொன்றும் ஜீவ சரித்திரங்கள் ஆகா . அவை ஜீவித சரித்திரங்கள் - வாழ்க்கை
வரலாறுகள் . ஜீவ சரித்திரம் ஒன்றே உளது . அதுவே சித்த வேதம் .சித்த சமாஜ நிறுவகர் சுவாமி சிவானந்த பரமஹம்சர் தம் ஆத்மானுபூமி யின் மகத்தான சரிதமாகும் சித்த வேதம் !
**********************************************************************************
தன்னை உணராப்படிப்பு எதுவாயினும் பொருளற்றதே .தன்னை உணர, தன்னைத்தான் படிக்க வேண்டும் .தன்னைதான் படிக்கும் கலையே *சித்தவித்தை *(பிரணாயாமம் ) தன்னையறிவதே ஞானோதயம் -கைவல்லியம் .
**********************************************************************************
ஜீவநாசம் ( உயிர் இழப்பு ) - மாயை -தன்னை அறியாமை - அஞ்ஞானம் -உண்டாக முலகாரணமாகி , பந்தத்திலும் துன்பத்திலும் ஆழ்த்தி ,சாவிற்கு விளைவாகிறது .ஜீவரட்கை (உயிர்பாதுகப்பு )தன்னறிவு -மெய்ஞ்ஞானம் -பெற மூல காரணமாகி , பந்தத்தினின்றும் விடிவித்து ,பேரின்பமும் நித்தியவாழ்வும் அளிக்கிறது .
**********************************************************************************
சித்த வேதம் தம் பெருமை சொல்லிலடங்காது அஃதறிய அதனை மேன்மேலும் பாடம் செய்து மனனம் செய்க .
**********************************************************************************
வழியும் வாசியும் வாய்மையும்
முழுமையும்
சித்த வேதம்
************************************************************************************
இருதயம்
எவ்வளவோ மேலேயிருகின்ற சூரியனுடைய கிரணத்தால் எவ்வளவோ கீழேயிருக்கின்ற பூமியிலுள்ள சஸ்யாதிகளான தாவரங்களில் சத்தாய் ஜலரூபமாயிருகின்ற ஜீவனை ஆகர்ஷித்து அதாவது சத்தை இழுத்து , அசத்தாயிருக்கின்ற அதாவது சத்தில்லாமல் இருக்கின்ற தாவரங்கள் காய்ந்து விழுந்து போகிறதல்லவா ? அவ்விதமே நம் உள்ளில்லும் சூரியன் இருக்கிறது. அந்தச் சூரியனுக்கே பிராணன் என்று பெயர் .அந்தப் பிராணனாய் அக்கினி சொரூபமாய் இருக்கின்ற சூரியன், நம்முடைய மேல்பக்கத்தில் புருவமத்தியில் இருக்கின்றது. அந்தப் பிராணனாகிய அக்கினி சொரூபமான சூரியனின் கிரணங்கள், முன்சொன்ன சூரிய கிரணங்கள் உலகத்தில் எவ்வாறு வியாபித்- திருக்கின்றனவோ, அவ்வாறு நம்முடைய சடத்தில் நகமுள்ள வரையும் வியாபித்திருக்கின்றன. அதுவுமன்றி , மிகவும் மேலேயிருக்கின்ற சூரியகிரணத்தால் எவ்வளவோ கிழே உலகத்தில் இருக்கிற தாவரங்களிலிருந்து சத்தாய் ஜலரூபமாய் இருக்கின்ற ஜீவனை சூரியன் எவ்வாறு இழுக்கின்றதோ, அவ்வாறு நம்முடைய எருக்குழியான வயிற்றில்லுள்ள எருவில்லிருக்கின்ற சத்தினை நம்முடைய புருவமத்தியத்தில் இருக்கின்ற பிராணனாயிருகிற சூரியன் ஆகர்ஷித்து அதாவது இழுத்தெடுத்து அசத்தான மலத்தை வெளியே தள்ளுகிறது .அதனால் சூரியனாய் , அக்கினிசொரூபமான பிராணன் இருக்கின்ற இடம் நமக்கு மேல்பக்கமாகிய புருவமத்தியத்திலாகும் . அந்த இடத்திற்கே இருதயம் என்று பெயர் . மூலம் : சித்தவேதம் -அத்தியாயம் 2
**********************************************************************************யோகம் என்பது சேர்க்கை ( ஐக்கியம் அடைவது) அகங்காரம் இல்லையேல் ஜீவனும் ( பரமாத்மாவான மனம் ) ஈஸ்வரனும் (ஜீவாத்மாவான ஆன்மா ) ஒன்றே , இரண்டல்ல . அகங்கார நாசமே யோகம் -ஜீவனும் ஈஸ்வரனும் ஐக்கியமடைவதற்கு குரிய ஒரே வழி . இது பல காரணங்களால் கர்மயோகம் , இராஜயோகம் , ஹடயோகம் எனப் பலவாறு அறியப்படுகிறது .
மதத்தின் பெயரில் எவ்வளவு தூரம் தவறாக நடத்தபடுகிறோம் ?
மத பேதமை நீங்கி நேர்வழி நடப்பதேப்படி ?
தன்னையும் தரணிதனையும் பற்றி எவ்வளவு தூரம் அறியாமையில் ஆழ்ந்துள்ளோம் .? தன்னை யறிந்து தரணியுணர்ந்து தானாயிருப்ப தெப்படி ?
துன்பமாம் சாக்காடு உருவதெப்படி ?
துன்ப விடுதலை அடைவதெப்படி ?
மெய்ஞ்ஞானமும் பேரின்பமும் பெறுவ தெப்படி ?
விடையறிய விளக்கம் தெரிய ,
கற்க கசடற சித்தவேதம் ; கற்றபின் நிற்க அதற்குத் தக .
-----------------------------------------------------------------------------------------------
சித்தசமாஜ வெளியீடுகள்
சித்தசமாஜ ஸ்தாபகர்
சுவாமி சிவானந்த பரமஹம்சர்
அருளிச் செய்த திருமறைகள் -----------------------------------------------------------------------------------------------
சித்தவேதம் - தமிழ் , மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு , இந்தி ,ஆங்கிலம் .
சித்த வித்தியார்திகள் நடவடிக்கை கிரமங்கள்-
தமிழ் , மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு , இந்தி ,ஆங்கிலம் .
கேரளானாசாரம் -தமிழ், மலையாளம் .
ஜாதி என்பது என்ன ?-தமிழ் , மலையாளம், கன்னடம் .
உலகசாந்திக்குள்ள ஜீவிதம் - தமிழ், மலையாளம், கன்னடம் .
உலகஷேமப் பிரகாசிகை - தமிழ், மலையாளம், தெலுங்கு .
சித்தவித்தை - ஆங்கிலம் , மலையாளம், தமிழ் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
பொதுப் பொருளாளர் ,
சித்தசமாஜம்
15 comments:
please visit http://siddavedam.blogspot.in/ to download book in tamil
Thiru siva avargale,
Sidha vidyarthigal nadavadikkei kiramangal soft copy vendukiren
link anuppa mudiyuma
Athma namaskaram
sundar
@Sitthan adimai, i have that book.. please give me some time.. i ll share that link
Athma namaskaram
Siva Anand
I Need : siddha vedam(tamil) சித்த வேதம்
(ஜீவனுடைய சரித்திரம்) books how can i get it please inform me my
Vasi yogam Chennai Anna Nagar where is the place ? Please give me number vasi yogam centre
Bro where are you living if u living in Chennai I will guide you to for siddha vidai smaj. if u need 9677113809
Iyya I want this book
ஐயா எனக்கு சித்த வேதம் புத்தகம் வேண்டும்
எங்கு கிடைக்கும்.
ஐயா எனக்கு சித்த வேதம் புத்தகம் வேண்டும் I'd balasri36@gmail.com
சித்தவேதம் புத்தகம் எங்கு கிடைக்கும்
Siddha vedham book is wanted
How can I got Siddha vedam Tamil book sir
Where are you from
நடவடிக்கை கிரம்மங்கள் ஆங்கிலத்தில் கிடைக்குமா ஐயா
Post a Comment